Thursday 2nd of May 2024 06:37:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திசர பெரேரா திடீர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திசர பெரேரா திடீர் ஓய்வு!


இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசார பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

அனைத்து விதமாக சர்வதேச போட்டிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் 84 ரி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டி விபரம்

06 டெஸ்ட் போட்களில் (10 இன்னிங்ஸ்) துடுப்பெடுத்தாடி 203 (அதிகபட்ச ஓட்டம் - 75) ஓட்டங்களை பெற்றுள்ளார்.

06 டெஸ்ட் போட்டிகளில் (8 இன்னிங்ஸ்) பந்துவீசி 11 விக்கெட்டுக்களை (அதிகபட்சமாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள்) கைப்பற்றியுள்ளார்.

166 ஒரு நாள் போட்டிகளில் (133 இன்னிங்ஸ்) துடுப்பெடுத்தாடி 2 ஆயிரத்து 338 ஓட்டங்களை (அதிகபட்சமாக 140) குவித்துள்ளார்.

ஒரு சதம் மற்றும் 10 அரைச் சதங்களை பெற்றுள்ளார்.

16 தடவை ஆட்டமிழக்காத நிலையில் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

166 ஒரு நாள் போட்டிகளில் (157 இன்னிங்ஸ்) பந்து வீசி 175 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை அவரது சிறந்த பந்து வீச்சு பெறுதியாக உள்ளது.

நான்கு தடவை 5 விக்கெட்டுக்களையும், ஐந்து தடவை 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

ரீ-20 விபரம்

84 ரீ-20 போட்டிகளில் (74 இன்னிங்ஸ்) துடுப்பெடுத்தாடி ஆயிரத்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதிகபட்ச ஓட்டமாக 61 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் 3 தடவை அரைச்சதங்களை பெற்றுள்ளார்.

22 தடவை ஆட்டமிழக்காத நிலையில் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

84 ரீ-20 போட்டிகளில் (67 இன்னிங்ஸ்) பந்து வீசி 51 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை சிறந்த பந்துவீச்சு பெறுதியாக உள்ளது.

இதேவேளை, முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

253 முதல்தர போட்டிகளில் பங்கு பற்றி 2 சதம், 18 அரைச்சதம் அடங்கலாக 3 ஆயிரத்து 986 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதிகபட்சமாக 140 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

அத்துடன் பந்துவீச்சில் 282 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE